ஆப்பிள் அப்டேட்ஸ், 2020 புத்தாண்டுக்கான ஹை எண்டு A14X சிப் ஐபாட் புரோ மற்றும் 16 அங்குல மாக்புக் புரோ அறிமுகம்!

ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்காலத் தயாரிப்புகளில் மினி எல் ஈ டி திரைகளுக்கு (Mini-LED Display) மாறவிருப்பதாகத் தகவல். காரணம், Mini-LED Display க்கள் பேக்லைட்டில் இருக்கும் 576 LED க்களுடன் ஒப்பிடுகையில் 10,000 LED வசதி கொண்டதாக இருக்கின்றன.


எனவே, அறியப்பட்ட ஆப்பிள் ஆய்வாளராக விளங்கும் மிங் - சி குவோ, ஆப்பிள் தயாரிப்பாளர்களிடம் 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஹை எண்டு A14X சிப்பில் 12.9 அங்குல ஐபாட் புரோ வை அறிமுகம் செய்யும் திட்டமிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்ட 16 அங்குல ஆப்பிள் மேக்புக் புரோ சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் எனும் வதந்தியும் இணையத்தைச் சுற்றி வருகிறது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தனது பெரிய அளவிலான சாதனங்கள்


அனைத்திற்கும்  OLED டிஸ்பிளே பேனல்களை விட Mini LED டிஸ்பிளேக்களையே அதிகமும் விரும்புகிறது. காரணம் அதிலிருக்கும் அதிகப்படியான வெளிச்சத்தைக் குறைத்துக் கொள்ளும் வசதி, வண்ணங்களை மாற்றிக் கொள்ளும் வசதி, (local dimming, wide colour gamut, and high contrast and dynamic range)போன்றவையே.


ஆகவே, இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஆப்பிள் மேலும் அதிகமான Mini LED ஹார்ட்வேர்களைத்  வெளியிடத் தொடங்கலாம் என குவோ கூறுகிறார். அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான முதல் அறிமுகமாக ஐ பாட் இடம்பெறுகிறது.


Popular posts
திருவண்ணாமலையில் கொரோனா பற்றிய பயம் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 . வயது 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை எடுத்து வந்த பொதுமக்கள்
Image
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாதவர்களும், வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களும் கப்பலை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எங்கள் நாட்டில் இனி கொரோனா இல்லை; சீனா அதிகாரப்பூர்வ தகவல்
Image
அத்தியாவசியப் பொருட்களை தேடி கிராமங்களை தேடி பொருட்களை வாங்கி வரும் மக்கள்
Image
ஆம்பூரில் தனியார் பள்ளி மைதானத்தில் தற்காலிக உழவர் சந்தை திறந்து வைத்து விற்பனையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர்
Image