ஹூண்டாயின் கோனா பேட்டரி எஸ்.யூ.விக்குப் போட்டியாக களமிறங்கும் எம்.ஜி மோட்டார்ஸ்

ஹூண்டாயின் கோனா பேட்டரி எஸ்.யூ.விக்குப் போட்டியாக இசட்.எஸ் எனப்படும் தனது புதிய ரக காரை எம்.ஜி மோட்டார்ஸ் களமிறங்கியுள்ளது.


இந்தியாவின் முதல் பேட்டரி எஸ்.யூ.வியாக ஹூண்டாய் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கோனா காருக்கு போட்டியாக, எம்.ஜி நிறுவனம் இந்த வகை காரை முன்னிறுத்துகிறது. இந்திய சந்தையில் எம்.ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது காராகவும், பேட்டரி எஸ்.யூ.வி வகையில் அதன் முதலாவது அறிமுகமாகவும் இதுஅமைந்துள்ளது.


20 முதல் 25 லட்சமாக இதன் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் முதல்கட்டமாக தில்லி, மும்பை, ஹைதராபாத்,  அஹமதாபாத் மற்றும் பெங்களூரு ஆகிய சந்தைகளில் மட்டுமே இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


இதுதொடர்பாக எம்.ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராஜீவ் சப்பா, 'ஏற்கனவே 10 சர்வதேச சந்தைகளில் வெற்றித்தடத்தை பதித்துள்ள இசட்.எஸ் கார் இந்திய சந்தையிலும் முத்திரை பாதிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்திய சாலை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தக் கார்  பலகட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது ' என்று தெரிவித்துள்ளார்.


Popular posts
திருவண்ணாமலையில் கொரோனா பற்றிய பயம் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 . வயது 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை எடுத்து வந்த பொதுமக்கள்
Image
கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாதவர்களும், வைரஸ் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களும் கப்பலை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எங்கள் நாட்டில் இனி கொரோனா இல்லை; சீனா அதிகாரப்பூர்வ தகவல்
Image
அத்தியாவசியப் பொருட்களை தேடி கிராமங்களை தேடி பொருட்களை வாங்கி வரும் மக்கள்
Image
ஆம்பூரில் தனியார் பள்ளி மைதானத்தில் தற்காலிக உழவர் சந்தை திறந்து வைத்து விற்பனையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தனர்
Image